search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயாஜி ஷிண்டே"

    சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் முன்னோட்டம்.
    கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாயே பேயே’.

    நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - நிரன் சந்தர், இசை - என்.ஆர்.ரகுநந்தன், கலை - சுப்பு அழகப்பன், படத்தொகுப்பு - கோபி கிருஷ்ணா, நிர்வாக தயாரிப்பாளர் - சக்கரத்தாழ்வார், ஆக்சன் - ஸ்டான்ட் ஜி.என், நடனம்  தினேஷ், தினா, இணை இயக்குனர் - வே.செந்தில்குமார், தயாரிப்பு மேற்பார்வை - அஸ்கர் அலி, விஜயகுமார், தயாரிப்பு - கோபி கிருஷ்ணா, கலையரசி சாத்தப்பன், டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சக்திவாசன்



    இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

    ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

    இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை என்றார்.

    சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
    ‘குப்பை கதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடன இயக்குநர் தினேஷ். யதார்த்மான கதையம்சத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது மற்றுமொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    ‘நாயே பேயே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சக்திவாசன் இயக்குகிறார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.



    இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

    ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

    இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை.

    கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

    கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `யோகி டா' படத்திற்கு `லூசிபர்' பட பிரபலம் தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். #YogiDa #Dhansika
    தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. கவுதம் கிருஷ்ணா இயக்கி வரும் இந்த படத்தில் தன்ஷிகாவுடன் கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதை காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது.

    ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `லூசிபர்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    கவுதம் கிருஷ்ணா - ஹிமேஷ் பாலா இணைந்து இந்த படத்திற்கு வசனம் எழுதுகின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசிகுமாரும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷும் பணியாற்றி வருகின்றனர். #YogiDa #Dhansika #DeepakDev

    டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் 'அகோரி' படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட்டார். #Aghori #AghoriTeaser #Vishal
    ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து 'அகோரி' என்ற படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே அகோரியாக நடிக்கிறார்.

    நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்க, வில்லனாக சகுல்லா மதுபாபு நடிக்கிறார். மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன் உள்ளிட் பலரும் நடித்துள்ளனர். 



    சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி படம் கதை உருவாகி இருக்கிறது. 'அகோரி' படத்தின் டீசரை நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் வெளியிட்டார். படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Aghori #AghoriTeaser #Vishal

    பாரதியாக நடித்து பிரபலமான சாயாஜி ஷிண்டே, தற்போது அகோரி படத்தில் சிவனடியாராக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார். #Aghori
    பாரதியாக நடித்து பிரபலம் ஆனவர் சாயாஜி ஷிண்டே. இவரது வித்தியாசமான நடிப்பில் ‘அகோரி’ என்கிற படம் தயாராகி வருகிறது. சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

    மேலும் கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன. இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் பேசும் போது, “தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டபோது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. 

    இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன். நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
    ×